டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அசோக் என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அசோக் 8 பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்றி வந்ததாகவும், பகலில் அரசுப் பேருந்து ஓட்டுநராகவும், இரவில் பாதுகாப்பு காவலராகவும் பணியாற்றி வந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று, பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது கார் வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
















