திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோயிலில், உள்ளூரைச் சேர்ந்த உயிரிழந்த இருவரும் தற்காலிக காவல் பணியில் ஈடுபட்டதாகவும், இரவுப் பாதுகாப்பு பணிக்கு, காவல்துறையினர் ஏன் நியமிக்கப்படவில்லை என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருவதாகவும், சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருப்பதகாவும், அரசுக்கோ, காவல்துறைக்கோ, குற்றவாளிகள் பயப்படுவதில்லை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாமல், முதலமைச்சர் ஸ்டாலினின் இரும்புக்கரம் துருப்பிடித்துவிட்டதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
















