9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலக வளாகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
2 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியில் இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு காலி பணியிடங்களில் சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்த ஆவண செய்யப்படும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், அரசுப் பதவிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
















