ஆந்திராவில் மலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தூங்கி கொண்டிருந்த நோயாளியின் செல்போனை மர்மநபர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் அல்லூர் சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள அரக்கு மலை கிராமத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகள் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவு வந்த மர்ம நபர் நோயாளிகள் அனைவரும் தூங்கி விட்டார்கள் என நோட்டமிட்டுள்ளார்.
பின்னர் நோயாளி ஒருவர் தனது அருகில் செல்போனுக்கு சார்ஜ் போட்டு வைத்திருந்ததை கண்ட மர்மநபர் செல்போனை திருடிச் சென்றுள்ளார்.
இதனைச் சிறிது நேரத்திற்கு பின் கவனித்த நோயாளி, உறவினரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது மர்ம நபர் செல்போனை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
















