கடந்தாண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய், இந்தாண்டு அண்ணனை மறந்திருக்கலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது தவெக தலைவர் விஜய் இந்தாண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், அண்ணனை விஜய் மறந்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.
















