தமிழக கோயில்களில் அரங்கேறும் குற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் ஷெல்வி தாமோதர் தெரிவித்துள்ளார்.
சேலம் மரவநெறியில் பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஷெல்வி தாமோதர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்துமத வழிபாட்டு தளங்களில் பிற மதத்தினருக்கு வேலையில்லை என தெரிவித்தார். மேலும் தமிழக கோயில்களில் அரங்கேறும் குற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
















