கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்குள்ள 18 வார்டுகளிலும் குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் போன்ற மக்களின் அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக ஏற்படுத்தி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
திமுக பேரூராட்சி தலைவர் பொறுப்பேற்றது முதல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி பெரியநாயக்கன்பாளையம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
















