கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டாலோ, அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டடது.
இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி தலைமையிலான இந்த குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட 31 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கூட்டம் விரைவில் கூடி மசோதா குறித்து ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















