தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாதத்தில் 4 கோடியே 26 லட்சம் ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் அக்டோபர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
அதன்படி ஒரு கிலோ 279 கிராம் தங்கம், 30 கிலோ 857 கிராம் வெள்ளி காணிக்கையாகக் கிடைத்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆயிரத்து 421 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















