பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அந்த வகையில் பிரபலமான ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனமும் தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது
அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 121 முதல் 141 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 98 முதல் 118 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 2 தொகுதியில் வெற்றிபெறும் என்றும், மற்றவை 1 முதல் 7 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான அனைத்து கருத்துக் கணிப்புகளும் தேசிய ஜனநாயக கூட்டணியே பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
















