திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலை கடையின் உட்பகுதியில், திறப்பு விழா காண்பதற்கு முன்பே மழைநீரால் ஒழுகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
செங்கம் அடுத்த மில்லத் நகர் பகுதியில் சுமார் 12 லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நியாய விலை கடை கட்டப்பட்டு, தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நியாய விலை கடையின் உட்பகுதியில் மழைநீரால் ஒழுகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு ஒப்பந்ததாரர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அரசு அலுவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















