வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும், அதிபர் டிரம்பும் இரு நாடுகளுக்கு இடையே மாறி மாறிக் குற்றச் சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.
அதேபோல் அமெரிக்க ராணுவம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் வரும் வெனிசுலா கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அதுமட்டுமன்றி தனது படைகளையும் கடற்பகுதிதியில் அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் வரும்போது அமெரிக்கா, வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்க அரசு வெனிசுலாவுக்கு எதிராக ஒரு போரை புனைந்து வருவதாக அதிபர் நிகோலஸ் மதுரா குற்றம் சட்டியுள்ளார்.
வெனிசுலா மக்கள் எந்தவொரு ஆக்கிரமிப்பிலிருந்தும் தங்கள் தாயகத்தை பாதுகாக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவுடன் வெனிசுலா பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் நிகோலஸ் மதுரா கூறியுள்ளார்.
















