இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கருடா என்ற வான் போர் பயிற்சி கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த இருதரப்பு விமானப் பயிற்சியின்போது, போர் விமானங்கள், மற்றும் பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பாண்டுக்கான பயிற்சிக்காக இந்தியாவின் முக்கிய போர் விமானமான சுகோய் 30 எம்கேஐ விமானங்களுடன் இந்திய விமானப் படை பிரான்ஸ் சென்றுள்ளது.
அங்குள்ள மான்ட் டி மார்ஸ் விமானப்படை தளத்தில் இந்த இருதரப்பு பயிற்சி நவம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இலக்குகளை தாக்குவது, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கைகளை இருநாடுகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
மேலும் இந்தப் பயிற்சி இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையேயான திறன் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
















