டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் வழக்கில் தீவிரவாதி உமர் நபியின் கூட்டாளி அமிர் ரஷீத்துக்கு 10 நாட்கள் NIA காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிரவாதி உமர் நபியின் நெருங்கிய கூட்டாளி அமீர் ரஷீத், டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரின் சம்பூரா பகுதியைச் சோ்ந்த அமீரின் பெயரில்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் I20 காா் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரை ஓட்டி வந்து உமா் நபி தற்கொலை தாக்குதல் நடத்திய நிலையில் அவருடன் சோ்ந்து அமீா் சதித் திட்டத்தில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் பட்டியாலா நீதிமன்றத்தின் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முன்பு அமீர் ரஷீத் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை 10 நாட்கள் காவலில் எடுத்துவிசாரிக்கத் தேசிய புலனாய்வு முகமைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
















