மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் வடுகபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாகக் கொள்முதல் செய்யாததால் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது.
இதனையடுத்து ஆள் பற்றாக்குறை காரணமாக, ஜேசிபி இயந்திரம் மூலம் நெல்லை உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் நெல்லை உலர்த்துவதால இழப்பீடு ஏற்படுவதாகவும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















