அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பதிலாக, சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக அஸ்ஸாம் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையில், அசாம் மாநிலத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வாக்காளருக்கான தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்குச்சாவடி நிலைய அலுவலா், வீடு வீடாகச் சென்று தங்களிடம் உள்ள ஏற்கெனவே நிரப்பப்பட்ட பதிவேட்டை சரிபாா்க்கும் பணியை மட்டும் மேற்கொள்வார் என்று, மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளா் பட்டியசிறப்புத் திருத்தம்தம் மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்றுள்ள மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா, இந்தப் பணிக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளார்.
















