தனது முதல் படத்திலிருந்து இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் நண்பருக்குப் பிரதீப் ரங்கநாதன் கார் பரிசளித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 17-ம் தேதி டியூட் படம் வெளியானது. உலகளவில் கோடிக்கணக்கில் இப்படம் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன், தனது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் நெருங்கிய நண்பரான ரமேஷ் நாராயணசாமிக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
















