இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் முன்னெடுத்து செல்லும் அனைவரும் இந்துக்களே என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சயில் பங்கேற்று பேசிய அவர், இந்து மதத்தை வெறும் வழிபாடாக மட்டும் பார்க்கக்கூடாது, அது அனைத்தையும் உள்ளடக்கியது என தெரிவித்தார்.
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும், தங்கள் வழிபாட்டு முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை விட்டுக்கொடுக்காமல், இந்த நாட்டை வணங்கினால் அவர்கள் இந்துக்கள் என தெரிவித்தார். இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றினால், இந்திய மூதாதையர்களைப் பற்றி பெருமை கொண்டால், அவர்களும் இந்துக்களே என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.
இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை என்றும், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒன்றுபடுத்துவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என்றும் மோகன் பகவத் கூறினார்.
















