குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகராட்சி ஆணையர் கொடுத்த பணிச்சுமை காரணமாக அலுவலக உதவியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தைக் கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணயாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகப் பாஜக உள்ளிட்ட கட்சியினரும் நகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
இந்நிலையில், ஆணையருக்கு ஆதரவாக நகர்மன்ற செயலாளர் வினு குமார் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தூய்மை பணியாளர்களைப் பணிக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினர்.
இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும், நகராட்சி அலுவலகத்தில் போலீசார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















