திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது.
மனக்கடவு பகுதியைச் சேர்ந்த சுசிலா என்பவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னதாக வழியில் அவருக்குக் கடுமையான வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ பணியாளர்கள், சுசிலாவுக்கு பிரசவ சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
















