சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஏற்காடு மற்றும் அதன் மலை கிராமங்களில் கடந்த 2 நாட்களாகப் பனிமூட்டம் நிலவுகிறது.
இந்தநிலையில் இன்று அப்பகுதிகளில் எதிரே வரும் நபர் தெரியாத அளவில் பனிமூட்டத்துடன் நிலவியது.
மேலும் அப்பகுதியில் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
















