வங்கதேசம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாகவும், டெல்லி கார் வெடிப்புக்குச் சம்பவத்தில் வங்கதேசத்திற்கு தொடர்புள்ளதாகவும் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஸெத் ஜாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தனது தாயின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் தனது தாய் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால் பயங்கரவாதிகள் அவரைக் கொன்றிருப்பார்கள் என்றும் கூறினார்.
ஷேக் ஹசீனா ஆட்சியில் சிறைபிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பயங்கரவாதிகளை வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் யூனுஸ் அரசாங்கம் விடுவித்துள்ளதாக வாஸெத் குற்றஞ்சாட்டி உள்ளார்.
2008 மும்பை தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பா குழு, இப்போது வங்கதேசத்தில் சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொிவித்தார்.
டெல்லியில் நடந்த சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களுடன் லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் கிளைக்கு நேரடி தொடர்பு இருப்பதாக வாஸெத் கூறியுள்ளார். தனது தாயாருக்கு எதிரான வழக்குகளில் நீதித்துறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் வாஸெத் குற்றஞ்சாட்டினார்.
















