சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டொனால்டு டிரம்ப் ஏற்பாடு செய்த அரசு இரவு விருந்தில் எலான் மஸ்கும் கலந்துகொண்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
டிரம்பை 2வது முறையாக அமெரிக்க அதிபராக அமரவைத்த பெருமை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க்கையே சேரும். அதிபர் தேர்தலில் டிரம்பின் பிரசாரத்திற்கு அதிகம் நிதியளித்தவரும், அதிக ஆதரவளித்தவரும் எலான் மஸ்கேதான்.
இதனால் பதவியேற்ற டிரம்ப், அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் DOGE துறையில் தலைமை ஆலோசகராக எலான் மஸ்க்கை நியமித்துக் கொண்டார். பின்னர் அதிபர் டிரம்புக்கும், எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டொனால்டு டிரம்ப் ஏற்பாடு செய்த அரசு இரவு விருந்தில் எலான் மஸ்கும் கலந்துகொண்டுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்தில் எலான் மஸ்குடன், போர்ச்சுகலின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
டிரம்ப் உடனான மோதலுக்குப் பிறகு எலான் மஸ்க் வெள்ளை மாளிகைக்கு மேற்கொண்ட முதல் வருகை இதுவாகும். எலான் மஸ்க் மீண்டும் டிரம்ப் உடன் இணைந்திருப்பதால் அமெரிக்காவில் மேலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழலாம் எனக் கூறப்படுகிறது.
















