மெட்ரோ ரயில் குறித்து வதந்திகளை பரப்பி மீண்டும் மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீது திடீர் அக்கறையை காட்டும் முதலமைச்சர், திமுக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையில் உள்ள கூறுகளை படித்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை எண்ணிக்கையே குறிப்பிட்டுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டின் உத்தேச மக்கள்தொகையை குறிப்பிடாதது ஏன் எனவும் வினவியுள்ளா்.
தமிழ்நாடு அரசின் மெட்ரோ அறிக்கையில் பல தவறுகள் இருப்பதைத் தாண்டி, மெட்ரோவிற்கான தேவையை நியாயப்படுத்தக்கூட முன்வரவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மெட்ரோ ரயில் குறித்து வதந்திகளைப் பரப்பி மீண்டும் மீண்டும் அரசியல் செய்வதாக விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன், இனியாவது மடைமாற்ற அரசியலுக்காக மெட்ரோவைக் கையில் எடுப்பதை நிறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.
















