தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வளர்ச்சியை பாதிக்கும் எந்த முடிவையும் திமுக அரசு எடுக்க கூடாது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ரூப் டாப் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின் உற்பத்திக்கு பெரும் ஆதரவு அளிக்க வேண்டிய தமிழக அரசு, அதற்கு மாறாக திட்டத்தை முடக்கும் வகையில் நெட்வொர்க் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
















