இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர் டெல்லி வந்துள்ளார்.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டில் இருந்து மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய தலிபான்கள் தடை விதித்தனர். இந்நிலையில், 5 நாட்கள் பயணமாக ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அசிசி, இந்தியா வந்துள்ளார்.
இருநாடுகள் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை ஆப்கானிஸ்தான் அரசு நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில், அல்ஹாஜின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
















