ஹாா்முஸ் நீரிணை பகுதியில் கடந்த வாரம் சிறைபிடித்த மாா்ஷல் தீவின் கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பலை ஈரான் விடுவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கப்பலை இயக்கி வரும் சைப்ரஸ் நாட்டைச் சோ்ந்த கொலம்பியா ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய்க் கப்பல் தலாராவை ஈரான் விடுவித்துள்ளதாகவும், அதில் இருந்த 21 பணியாளா்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















