கன்னியாகுமரி கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க “சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாஜ்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து குளச்சல் கடற்பகுதி வரை “சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாதுகாப்பு படையினர், அதிநவீன படகில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாகப் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.
கடலோர பகுதிகள் மட்டுமின்றி கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளிலும் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்
















