வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தினர், பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குப் பாலாற்றில் இருந்துதான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதால் குடிநீர் மாசடைவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து மாநகராட்சிக்குப் பலமுறை புகாரளித்தும் அதனை நிறுத்தவில்லை என வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் மயான கொள்ளை நடக்கும் இடத்தில் இனியாவது குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
















