இந்தியா-பாக்., போர் நிறுத்தம் - 60வது முறையாக தம்பட்டம் : தொடரும் ட்ரம்ப் காமெடி!
Mar 15, 2026, 12:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா-பாக்., போர் நிறுத்தம் – 60வது முறையாக தம்பட்டம் : தொடரும் ட்ரம்ப் காமெடி!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா பலமுறை மறுத்தும், மீண்டும் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 60வது முறையாக இருநாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதாகத் தற்பெருமையாகக் கூறியுள்ளார். இந்த முறை என்ன பேசினார்? எங்குப் பேசினார்? என்று இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த செப்டம்பர் மாதம் ஐநா சபையின் 80வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலகளவில் முடிவில்லாத போர் என்று கருதப்பட்ட 7 போர்களை 7 மாதங்களில் நிறுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசை தமக்க வழங்க வேண்டும் என்று பலர் கூறுவதாகவும், ஆனால் போர் இல்லாத உலகில் குழந்தைகள், தங்கள் பெற்றோரின் அரவணைப்பில் வளருவதை மட்டுமே உண்மையான பரிசாகத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கடந்த மே மாதம், இந்தியா- பாகிஸ்தான் இடையே நீடித்த போரை விடிய விடிய இரவு முழுவதும் மத்தியஸ்தம் செய்து முடிவுக்குக் கொண்டுவந்ததாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. சமீபத்தில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்ட அமெரிக்க-சவூதி முதலீட்டு மன்றத்தில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், கூச்சமே இல்லாமல் 60வது முறையாக இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் அணு ஆயுதப் போராக மாறும் சூழலில் தாம் தலையிட்டு, போரை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுக்கும் 350 சதவீதம் வரி விதிப்பதாகவும், இருநாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய நிரந்தர தடை விதிப்பதாக மிரட்டியதாகவும், வரிக்குப் பயந்து இருநாட்டுத் தலைவர்களும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்டிடம் இருநாடுகளுக்கும் 350 சதவீத வரியை விதிக்க உத்தரவிட்டதாகவும், உடனே பிரதமர் மோடி தம்மை தொடர்பு கொண்டு போரை நிறுத்தி விட்டதாகத் தெரிவித்தார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, வெள்ளைமாளிகையில் சவூதியின் பட்டத்து இளவரசருடனான இருதரப்பு சந்திப்பின் போதும் இதே கருத்தை ட்ரம்ப் கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் கெஞ்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இரு நாட்டு DGMOக்கள் இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கடந்த மே 10 ஆம் தேதி ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.

எந்த நாட்டின் தலைவரும் இந்தியாவிடம் ஆப்ரேஷன் சிந்தூரைநிறுத்தச் சொல்லவில்லை என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்துள்ளார். மேலும், பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Tags: India-Pakistan ceasefire - Trump comedy continues to boast for the 60th timeதம்பட்டம் தொடரும் ட்ரம்ப் காமெடிஇந்தியா-பாக்.Indiapakistanபோர் நிறுத்தம்'Operation Sindoor': Former Pentagon official praises India
ShareTweetSendShare
Previous Post

பலவீனமாகும் பூமியின் காந்த கவசம் : பூமிக்கு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Next Post

கண்டுகொள்ளாத எம்எல்ஏ : குமுறும் மக்கள் – கால்வாயை கடக்க பாதை இல்லாததால் வேதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies