மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று வந்த பள்ளி மாணவர்களுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் தேசிய கராத்தே போட்டி கடந்த 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில், ஈரோட்டை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 2 பேர் கலந்து கொண்டு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர்.
இந்நிலையில், சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்குப் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களை சால்வை அணிவித்து, கேக் வெட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
















