தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்திய நிறுவனங்கள் 246 கோடி ரூபாய் வரி செலுத்தாத வழக்கில் தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இணைத்துள்ளது.
தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை பயன்படுத்திய தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், 246 கோடிக்கும் அதிகமான வரியை நிலுவையில் வைத்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியானது.
இதில் தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இரண்டு குடிநீர் திட்டங்கள் மட்டும் 214 கோடி வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நீர் பயன்பாட்டு வரி செலுத்தாத நிறுவனங்கள் விளக்கமளிக்க உத்தரவிட்டது.
மேலும், தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தை இந்த வழக்கில் இணைத்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
















