தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகப் பெண்ணின் மரணம்குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உத்தரவிட்டுள்ளார்.
கணைய பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஊர் காளி என்ற பெண் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊர் காளியின் இறப்புக்கு, அங்குப் பணியில் இருந்த செவிலியர்தான் காரணம் என அவரது மகள் குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவை தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டது.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம்குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் ரேவதி பாலன் உத்தரவிட்டுள்ளார்.
















