திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
2 நாள் பயணமாகத் திருப்பதி சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌதி முர்மு, திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாரை வழிபட்டார்.
இதனை தொடர்ந்து, திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 9.30 மணி அளவில் வராகச் சாமியை வழிபட்டார்.
அப்போது, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு, தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கைய்யா சவுத்ரி வரவேற்பு அளித்துக் குடியரசுத் தலைவரை ஏழுமலையான் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
இதனை அடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
















