தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு திட்டம் - அண்ணாமலை
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு திட்டம் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு திட்டமிட்டிருக்கிறது என்று பாஜக  தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் வாயிலாக ஏற்கனவே ஒரு பெரும் ஊழல் நடைபெற்றதை, கடந்த மார்ச் மாதம் சுட்டிக் காட்டியிருந்தோம். தற்போது, மீண்டும் ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை மாநகராட்சி 4 மற்றும் 8 ஆகிய இரண்டு மண்டலங்களில், வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணிக்கான தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளி கோரல், கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, சுமார் ₹4,000 கோடி ஆகும். ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்க கடைசி நாள், ஏற்கனவே நான்கு முறை தள்ளி வைக்கப்படதாகக் கூறப்படுகிறது.

இறுதியாக, நவம்பர் 20, 2025  மாலை 3 மணி வரை, ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மூன்று நிறுவனங்கள், தங்கள் ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பித்திருந்தனர். இந்த நிலையில், ஒட்டு மொத்த விதிகளையும் மீறி, நேற்று மாலை 3 மணிக்கு முடிவடைந்த ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிப்பை, மீண்டும் ஒரு நாள் நீட்டித்து, இன்று (21.11.2025) கடைசி நாள் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு, நேற்று மாலை, 4 மணிக்கு மேல் வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான பின்னர், மேலும் ஒரு நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இதன்படி, ஏற்கனவே மூன்று நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளி மதிப்பைத் தெரிந்து கொண்டு, அதன்படி தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி மதிப்பை அமைத்து, ஒப்பந்தம் தங்களுக்குக் கிடைப்பதற்குச் சாதகமாகவே, இந்த கால நீட்டிப்பு செய்துள்ளதாக அறிய முடிகிறது. ஏற்கனவே நேரம் முடிவடைந்த ஒப்பந்த அறிவிப்பை, மீண்டும் கால நீட்டிப்பு செய்வது, முற்றிலும் விதிமீறல் மட்டுமின்றி, ஒப்பந்தத்தின் வெளிப்படைத்தன்மையையும் பாதிப்பதாகும்.

இந்த விதிமீறல் காரணமாக, ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி கோரிய மூன்று நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், ஒப்பந்த மதிப்பான சுமார் ₹4,000 கோடியில், பெருமளவில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

உடனடியாக, சென்னை மாநகராட்சி, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், இந்த கால நீட்டிப்பு செய்தது யார் வற்புறுத்தலில் என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். நேரம் முடிவடைந்த பின்னர், ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனம் யாருடையது, அவர்கள் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMKMK StalinDMK government's plan to stage a massive scam in the name of making sanitation workers entrepreneurs - Annamalai
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் – இந்திய கடற்படை!

Next Post

கிருஷ்ணகிரியில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் மீது புகார்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies