பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் - இந்திய கடற்படை!
May 12, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் – இந்திய கடற்படை!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை சீனா வழங்கும் நிலையில், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இது பிராந்திய கடல் சமநிலையை கெடுக்கும் பாகிஸ்தானின் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

சீனா உடனான 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் 8 ஹேங்கர் ரக டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் 2015-ல் கையெழுத்தான நிலையில், 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவிலும், நான்கு பாகிஸ்தானிலும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆப்ரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் ராணுவ தளவாடங்கள் பல்லைக் காட்டிய நிலையில், குளோபல் டைம்ஸ்-க்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு இருநாடுகள் உறவில் புதிய மைல் கல் என்று கூறியிருந்தார்.

மே மாதத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் மண்ணை கவ்விய பாகிஸ்தான், அதன் பின்னர் கடற்படையை வலுப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது… இந்த நிலையில், இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் வத்சாயன், இந்தியாவின் கடல் எல்லையை பாதுகாக்க, கடற்படை எப்போதும் தயாராக உள்ளதாகக் கூறினார். சீனா பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் வழங்குவதை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார். பாகிஸ்தான் கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் விரைவில் சேர்க்கப்படும் என்று நம்புவதாகக் கூறிய அவர், அதை எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்த்துறையில் நமக்கு என்னென்ன திறன்கள் தேவை என்பதை இந்திய கடற்படை அறியும் என்று கூறினார்.

தற்போது இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களும், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பல டீசல் மின்சார தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. கடற்படையில் நவீன போர்க்கப்பல்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட வைஸ் அட்மிரல், சீனா ஃபுஜியன் விமானம் தாங்கிக் கப்பலை இணைத்த போதிலும், இந்தியா கடல்சார் வலிமையை தக்க வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

சீனாவை பொறுத்தவரை, அவர்களது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் வந்துவிட்டது.. எனினும், இந்தியாவில் கட்டுமானத்தில் உள்ள கப்பல்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் என்றும், இது இந்திய கடற்படையை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் கடற்படையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சேர்க்கப்படுவது ஒருவகையில் இந்தியாவுக்கு சவால் விடும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Tags: Pakistan to buy Chinese submarines: Indian Navy ready to deal with anythingபாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்PM Modiindian armyindian navyஇந்திய கடற்படை
ShareTweetSendShare
Previous Post

வம்பிழுக்கும் பாகிஸ்தான் : வரைபடத்திலேயே இருக்காது என இந்தியா எச்சரிக்கை!

Next Post

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு திட்டம் – அண்ணாமலை

Related News

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies