திருப்பூரில் நடைபெற்ற அஸ்மிதா தடகள போட்டியில் ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.
மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டன.
















