நெல்லை மாவட்டம் பனகுடியில் சீமான் நடத்தவிருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பனகுடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தமிழக மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு நிர்வாகிகள் நெல்லை வந்திருந்தனர்.
இப்போராட்டத்திற்கு, காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், 16 பேரை கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, தடையை மீறி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மாட்டின் உரிமையாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
















