தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்குத் தன்னை வரவேற்கும் வகையில் பாடப்பட்ட தமிழ் பாடலை ரசித்துக் கேட்டுக் கைத்தட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அங்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவரை வரவேற்கும் வகையில் கங்கா மையா என்ற தமிழ் பாடல் பாடப்பட்டது. இதனைப் பிரதமர் மோடி மெய்மறந்து கேட்டு ரசித்து, கைத்தட்டி பாராட்டினார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் கங்கா மையா நிகழ்ச்சியைக் கண்டது தனக்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் பாடல் தமிழில் பாடப்பட்டது எனவும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் செல்லும் இடமெல்லாம் தமிழை புகழ்ந்து வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
















