தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்பதை அறிய அவருடன் ஒன் டூ ஒன் பேச்சுவார்த்தை நடத்தும்படி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளாத தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக – அதிமுகவிற்கு போட்டியாக, தனி கூட்டணி அமைக்கத் தவெக சார்பில் பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் தவெக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இதற்கிடையே தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்பதை அறியவும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தன் கட்சியின் நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் கூட்டணி கட்சியான திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
















