ரஷ்யாவுடனான மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும்படி உக்ரைனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கும், நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினேன் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
















