S.I.R செயல்முறை குறித்து தமிழகத்தில் இன்று முதல் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், S.I.R செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தமிழகம் வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரும் 26-ஆம் தேதி வரை சென்னையில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்ய உள்ளதாகவும்,தொடர்ந்து கள அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய இயக்குநர் கிருஷ்ண குமார் திவாரி, S.I.R செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட அளவில் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மற்றும் டிஜிட்டல் முறை உள்ளீடு குறித்து மதிப்பாய்வு செய்ய கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.
அதேபோல் தேர்தல் ஆணைய செயலாளர் மதுசூதன் குப்தா, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ஆய்வு செய்வார் என அர்ச்சனா பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.
















