கர்நாடகா மாநிலம், ஹலகூரில் கடைக்குச் சென்றவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஹுல்லகலா கிராமத்தைச் சேர்ந்தவர் இரண்னையா. இவர் ஹலகூரில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடைக்குப் பெயிண்ட் வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது இரண்னையா திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்துள்ளார். கடை உரிமையாளர் அவரை மீட்க வருவதற்குள் இரண்னையா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















