சென்னையில் கண்களை கட்டிக்கொண்டு அம்பெய்து 7 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
நந்தனம் YMCA கல்லூரியில் சித்தார்த் பன்னீர் என்ற சிறுவன் கண்களைக் கட்டியபடி 12 நிமிடங்களில் 64 அம்புகளை எய்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்கள் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கிக் கெளரவித்தன.
















