சிந்து நதி நீரை நிறுத்தி வைப்பது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் புலம்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்தது. இதனால் சிந்து நதிப் படுகையிலிருந்து வரும் தண்ணீரை நம்பி 80 சதவீத விவசாயத்தை மேற்கொள்ளும் பாகிஸ்தான், கடுமையான நீர் பற்றாக்குறை அபாயங்களை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய இந்தோ – பசிபிக் மாநாட்டில் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், சிந்து நதி நீரானது அரசியலுக்காக ஆயுதமாகப் பயன்படுத்தப்படாமல், ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதி நீர் வழங்கப்படாது எனக் கூறியுள்ள இந்தியா, ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
















