நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் சுமார் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன..
நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் 77 சென்டிமீட்டர் மழை பதிவாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
குறிப்பாக பூவைத்தேடி, காமேஸ்வரம், பட்டிரோடு , புதுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வயல்வெளிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 நாட்களே ஆன சம்பா நாற்று பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும், என்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், விளைநிலங்கள் நீரில் மூழ்கி காணப்படும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
















