தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பலத்த காற்று வீசியதால் 6 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் உடைந்து சேதமடைந்தன.
தேனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக சிறப்பாறை கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் அறுவடைக்கு முன்னரே சாய்ந்தும், உடைந்தும் சேதமாகியுள்ளன.
ரவி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் 6 ஏக்கர் அளவிலான கரும்புகள் சேதமாகிய நிலையில் , ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக அவர் வேதனை தெரிவித்தார். மேலும், தான் கடன் வாங்கி விவசாயம் செய்ததாகவும், அரசு உரிய இழப்பீடு தரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
















