கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெய்த கனமழை காரணமாக ராட்சத மரம் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்த வேப்ப மரம் முறிந்து மின்கம்பம் மீது விழுந்தது.
இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
















