மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடுக்கும் வனத்துறையினாின் வேலையே பறிபோகும் அளவுக்கு கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என, நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றிருந்தார். அப்போது கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி தேவராட்டம் ஆடி அவரை வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தின்போது, தங்களை மாடு மேய்க்க விடாமல் வனத்துறையினர் தடுப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினார்.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், மாடு மேய்ப்பதை தடுக்கும் வனத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
















