அர்ஜென்டினாவில் புத்தக கடைகளின் இரவு என்ற திருவிழாவை ஒட்டி நடைபெற்ற புத்தக விற்பனை நிகழ்ச்சியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் செல்போன், கணினி உள்ளிட்ட இயந்திரங்களுடன் இன்றைய தலைமுறையினர் ஒன்றி வாழ்ந்து வரும் நிலையில் புத்தக வாசிப்பு என்பது மிகவும் குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் புத்தக வாசிப்பை அதிகரிக்கும் வகையில் அர்ஜென்டினாவில் ஆண்டு தோறும் புத்தக கடைகளின் இரவு என்ற திருவிழா நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு அர்ஜென்டினாவில் நடைபெற்ற புத்தக கடைகளின் இரவு திருவிழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இந்த வருடாந்திர புத்தக கடைகளின் இரவு திருவிழாவில் பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன.
சலுகை விலையில் விற்கப்பட்ட புத்தகங்களை சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.
















